Learn and Earn

Skillnet Online Classes


வானம் வரை பறக்கலாம்
Skill Net: இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம்
K. பிரபாகரன்
Dr. முஹம்மது அஸ்கர்
மனித வளமும் கல்வி வளமும் நிறைந்திருக்கும் இந்திய திருநாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதாக பலராலும் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லை. இன்றும், இரண்டு லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் தொழில்நுட்ப வல்லுநர்களும் நிறுவனர்களும் உருவாகிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும்தான் இருக்கிறார்கள். அதே வேளையில், இன்னொரு இடத்தில் அதே கல்வித் தகுதியுடன் ரூ. 5,000–7,000 ஊதியம் பெற்றுக் கொண்டு நாள் முழுக்க, ஆண்டு முழுக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொறியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை. உண்மையில், திறமை இல்லா திண்டாட்டம் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நமக்கு தேவை, ஒரு துறை சார்ந்த கல்வியோ அல்லது பயிற்சியோ இல்லை. பல்துறை அறிவும், சர்வதேச அளவிலான துறை சார்ந்த சமீபத்திய வளர்ச்சி குறித்த பேரறிவும் தான் தேவையாகும். பல்துறை சார்ந்த அறிவையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும், சாதாரண குடும்பங்களில் இருந்து உருவாகி வரும் இளைஞர்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது.
ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சியைப் பெறுவதற்கே பல்லாயிரக்கணக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதுவும் மிகச் சாதாரணமான பயிற்சிக்கே இவ்வளவு செலவாகும். இந்த சூழலில், எவ்வாறு பல்துறை சார்ந்த ஆழமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்வது என்று தான் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்ற, Skill Net என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தை, Nesam School of Media நடத்தி வருகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைத்து துறைகளையும் சார்ந்து, டிஜிட்டல் மீடியா துறை சார்ந்த அறிவும் ஆற்றலும் அவசியமாகி இருக்கிறது.
எழுதுவதற்கு, பேசுவதற்கு, வரைவதற்கு என்று அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து, Nesam School of Media மற்றும் Hira Skill Development Academy ஆகியவை இணைந்து, Skill Net பயிற்சிகளை வார இறுதியில், சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடத்தி வருகின்றன. மிகக் குறைவான கட்டணத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும் இந்த நிறுவனம், சாதாரணமான படைப்பாளர்களையும்,எழுத்தாளர்களையும்,சமூக வலை ஊடக ஆர்வலர்களையும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் பெறச் செய்கிறது.
தொழில்நுட்ப பயிற்சிகள்
இந்நிறுவனம் இதுவரை பல பயிற்சிகளை வழங்கியுள்ளது:
1. எளிதான AI பயிற்சி
2. உள்ளடக்கம் உருவாக்குதல்
3. டிஜிட்டல் டிசைனிங் பயிற்சி
4. வாட்ஸ்அப் பிஸினஸ் CRM வகுப்பு
5. ஆடியோ மற்றும் வீடியோ எடிட்டிங் வகுப்பு
6. ஆடியோ ரேடியோ போட்காஸ்ட் கலை
7. ஸ்கிரீன் மேஜிக் கலை
8. டிஜிட்டல் புக் மேக்கிங்
9.டிஜிட்டல் மார்கெட்டிங்
10.மாணவர்களுக்கான AI
11.Social Media மார்கெட்டிங்
12.SMART TEACHER TECHNICS
13.மாணவர்களுக்கான EASY TECH
14.மாணவர்களுக்கான Digital Designing
15.Mobile Digital Tools and AI, Media Apps
போன்ற வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
பாட அறிவு மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட இணைய ஊடகத்தை உருவாக்கி பட்டறிவும் பெற்ற காரைக்கால் K. பிரபாகரன் மற்றும் Dr. முஹம்மது அஸ்கர் ஆகிய இரு பேராசிரியர்களால் இப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆன்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தத் தெரிந்த அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான தமிழில்,திரை பகிர்வு அதாவது ஸ்கீன் ஷேர் செய்து செய்முறை பயிற்சிகள் செய்து காட்டப்படுகிறது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாட்சப் மூலம் தேவையான வகுப்பு வீடியோ பதிவுகள்,பயிற்சிக்கு தேவையான குறிப்புகள்,ஆலோசனைகள்,வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் பலர் வேலை வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.வீட்டிலிருந்தே டிஜிட்டல் ஊடக பணிகளை செய்யும் வாய்ப்பு,இணைய வானொலி,போட்காஸ்ட்,விளம்பரங்கள் தயாரிக்கும் வாய்ப்பையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர்.
நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள Skill Net Digital Technology Development Studies Phone & WhatsApp: 8668103301 & 9080475780
K. பிரபாகரன்
Dr. முஹம்மது அஸ்கர்